திருப்பூர்: கந்துவட்டி கும்பல் தாக்குதல் – நடவடிக்கை கோரிக்கை

995பார்த்தது
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, தனியார் பைனான்ஸ் கடன் வசூல் பிரச்சினையால் அருந்ததியர் சமூக இளைஞர் சதீஷ்குமார் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடன் திருப்பிச் செலுத்த தாமதமானதால் பைனான்ஸ் உரிமையாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரக்குறைவாக பேசி அடித்ததாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த சதீஷ்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி