திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு பல்வேறு பகு தியில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்ப டுகிறது. இங்கு மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடை கள் அதிக அளவில் உள்ளன. இதனால் சுற்றுவட்டார பகுதி யில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் மார்க்கெட்டிற்கு பூண்டு வரத்து குறைந்து காணப்பட்டதால் ரூ. 400 வரை விற்பனை செய்யப்பட்டு வந் தது.
தொடர்ந்து கடந்த மாதம் முதல் தென்னம்பாளையம் மார்க் கெட்டிற்கு பூண்டு வரத்து அதிகரித்து காணப்படுவதால் விலையும் குறைந்து காணப்படுகிறது. தரத்தை பொறுத்து கிலோவுக்கு ரூ. 60 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப் பட்டு வருகிறது. பூண்டு விலை குறைவால் சாலையோர கடைகள் மற்றும் ஆட்டோக்களில் கூவி, கூவி பூண்டு விற் பனை செய்யப்பட்டு வருகிறது. பூண்டு விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச் சியில் உள்ளனர்.