ரெயில் மோதி காவலாளி பலி

0பார்த்தது
ரெயில் மோதி காவலாளி பலி
திருப்பூர் மண்ணரை பகுதியைச் சேர்ந்த 54 வயதான அய்யாதுரை, தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை விஷயமாக வெளியே சென்றபோது, வீட்டின் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் திருப்பூர் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அய்யாதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you