திருப்பூர்
திமுக மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ், திமுகவில் இருந்து விலகுவதாகவும், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும் அறிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1976 முதல் பல பொறுப்புகளை வகித்ததாகவும் தெரிவித்தார். 2026 முதல் மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்ற எண்ணம் தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும், பல கட்சிகளில் இருந்து அழைப்புகள் வந்ததாகவும் அவர் கூறினார்.