புகையிலை பொருட்கள் பதுக்கிய

2பார்த்தது
புகையிலை பொருட்கள் பதுக்கிய
மங்கலம் அருகே அய்யன்நகர் பகுதியில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். இதில், மணிமேகலை என்பவருக்கு சொந்தமான கடையில் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மணிமேகலைக்கு சொந்தமான குடோனில் தங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திரகுமார் (44) என்பவர் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜிதேந்திரகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி