திருப்பூர் கருவம்பாளையத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 234 தொகுதிகளில் சுற்றுப்பயணம் நடைபெற்று வருகிறது. தேர்தல் அறிக்கைக்காக மக்களின் எதிர்பார்ப்புகளை சேகரித்து வருகிறது. திருப்பூர் தெற்கு தொகுதி பாஜகவுக்கு சாதகமானது என்றார். மேலும், முதல்வர் ஸ்டாலின் மக்கள் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், என். டி. ஏ கூட்டணியை பார்த்து திமுக பதட்டமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.