நுண்ணறிவு போலீசார் பணியிட மாற்றம்

468பார்த்தது
நுண்ணறிவு போலீசார் பணியிட மாற்றம்
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள நுண்ணறிவு பிரிவு போலீசார், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நிலையத்தில் பணியாற்றுவதை தவிர்க்கும் வகையில் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதன்படி, அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய அன்பரசன் நல்லூர் போலீஸ் நிலையத்திற்கும், நல்லூரில் பணியாற்றிய வெள்ளைச்சாமி அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மூலம் போலீஸ் நிலையங்களில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி