தி. மு. க. திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளர் க. செல்வராஜ் எம். எல். ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா-செம்மொழி நாள் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி திருப்பூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, வட்டம், கிளை, ஊராட்சி என மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கருணாநிதி உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும். கட்சியின் கொள்கை பாடல்களை ஒலிபரப்பு செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டும். இலவச கண் சிகிச்சை முகாம், ரத்ததான முகாம் நடத்தியும், ஜூன் மாதம் முழுவதும் கருணாநிதி பிறந்தநாள் விழாவை பேச்சுப் போட்டிகள், கட்டுரை, கவிதை போட்டிகள், கபடி, கிரிக்கெட் போட்டிகள் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி சிறப்பாக கொண்டாட வேண்டும்.
இந்த நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர தலைவர்கள், துணைத் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கட்சியினர், பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.