திருப்பூர்-ஈரோடு இடையே ஊத்துக்குளி ரயில் நிலையம் பகுதியில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கேரளாவிற்கு செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 18-ந் தேதி ஆகிய நாட்களில் எர்ணாகுளம்-டாடாநகர் விரைவு ரயில் (எண்: 18190) திருப்பூர் அருகே வஞ்சிபாளையம் நிலையத்துக்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். இதேபோல், ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் (எண் 1335) இயக்கத்திலும் தாமதம் ஏற்படும்.