கோர்ட்டு உத்தரவின்படி ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதி யம் உயர்த்தி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சி. ஐ. டி. யு. திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் திருமு ருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி கவுன்சிலர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் ரங்கராஜ், கவுன் சிலர் தேவராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது ஒப்பந்த தூய்மைப் பணி யாளர், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கிட வேண்டும். பி. எப். , இ. எஸ். ஐ. பிடித்தம் செய்ததை கணக்கில் செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட துணைத்தலைவர் வையாபுரி, நகர துணைத்தலைவர் ஆறுமுகம் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நக ராட்சி தலைவர் மற்றும் கமிஷனரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.