திருப்பூர்: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கைது

1447பார்த்தது
திருப்பூர்: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கைது
கச்சாம்பாளையத்தைச் சேர்ந்த குமார் (48) நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, புஷ்பா சந்திப்பு அருகே பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானார். காயமடைந்த குமார் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த டிரைவர் தேவேந்திரன் (43) போதையில் லாரியை ஓட்டி வந்தது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி