திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. எம்.எஸ்.எம். ஆனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம் மற்றும் இடுவாய் பகுதி மக்கள் நேற்று கலெக்டர் மனிஷ் நாரணவரேவிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இடுவாய் ஊராட்சி சின்னகாளிபாளையம் பகுதியில் கொட்டப்படுவதை எதிர்த்து, இப்பகுதி மக்களும் விவசாயிகளும் போராடி வருகின்றனர். குப்பை கொட்டுவதால் விவசாய நிலங்கள் மாசுபடுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இடுவாயில் குப்பை கொட்டுவதை நிறுத்தி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.