திருப்பூர்: எம் சாண்ட், ஜல்லியை வாகனத்தில் எடுத்துச்செல்ல நடைசீட்டு அமல்

77பார்த்தது
திருப்பூர்: எம் சாண்ட், ஜல்லியை வாகனத்தில் எடுத்துச்செல்ல நடைசீட்டு அமல்
எம் சாண்ட், ஜல்லியை வாகனத்தில் எடுத்துச்செல்ல, மின்னணு போக்குவரத்து நடைசீட்டு அமல்
9-ந் தேதி முதல் இணையதளம் மூலம் வழங்க ஏற்பாடு.

கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்யும் அனைத்து உரிமையாளர்கள், முகவர்கள் சட்ட விதிகளின் படி, கனிம இருப்பு கிடங்கு பதிவு சான்று பெறப்பட்டு எம் சாண்ட், ஜல்லி போன்றவற்றுக்கு உரிய போக்குவரத்து நடைசீட்டு பெற்று எடுத்துச்செல்ல வேண்டும். இதன் தொடர்ச்சியாக எம் சாண்ட், ஜல்லி ஆகிய கட்டுமான பொருட்கள் எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்டு வந்த லச்சி னைகள் ஒட்டப்பட்ட போக்குவரத்து நடைசீட்டுகள் பயன்ப டுத்துவது நிறுத்தம் செய்யப்படுகிறது. தற்போது எம் சாண்ட், ஜல்லி ஆகிய கட்டுமான பொருட்கள் எடுத்துச்செல்ல வழங் கப்படும் போக்குவரத்து நடைசீட்டு வருகிற 9-ந் தேதி முதல் www. mimas. tn. gov. inஎன்ற இணைய தளம் மூலமாக மின் னணு முறையில் மட்டுமே வழங்கப்படும். மின்னணு முறை யில் வழங்கப்படும் போக்குவரத்து நடைசீட்டு மட்டுமே செல் லுபடியாகும். மேலும் மின்னணு முறையில் வழங்கப்பட்ட போக்குவரத்து நடைசீட்டு இல்லாமல் எம் சாண்ட், ஜல்லி ஆகிய கனிமங்களை எடுத்து வரப்படும் வாகனங்கள் உரிய விதிகளின்படி பறிமுதல் செய்யப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி