திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, எல். ஆர். ஜி. மகளிர் அரசு கலைக்கல்லூரி மாணவிகளுடன் 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சியில் கலந்துரையாடினார். பெண் கல்வியின் அவசியம், தனித்திறன்கள், விளையாட்டு, மற்றும் எதிர்கால லட்சியங்கள் குறித்து அவர் மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். ஆசிரியர், அரசு பணியாளர், ஐ. ஏ. எஸ்., ஐ. பி. எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற மாணவிகளின் விருப்பத்தை கேட்டறிந்தார். போட்டித்தேர்வுகளுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உதவிகள் செய்யப்படுவதாகவும், கல்லூரி நூலகங்களையும், செய்தித்தாள்களையும் பயன்படுத்தி நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளவும், தனியார் வேலைவாய்ப்புகளுக்கு திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.