திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற பிரேந்திர பிஜி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவரிடம் 860 கிராம் புகையிலை பொருட்கள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேந்திர பிஜியை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.