திருப்பூர்: பஸ் பயணியிடம் பணம் திருடியவர் கைது

59பார்த்தது
திருப்பூர்: பஸ் பயணியிடம் பணம் திருடியவர் கைது
ஈரோட்டை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 60). இவர் நேற்று முன்தினம் திருப்பூர் மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது பையில் ரூ. 24 ஆயிரத்து 500 வைத்திருந்தார். பஸ்சில் இருந்து இறங்கிய போது அவருடைய பை கிழிக்கப்பட்டு பணம் திருடப்பட்டதை தெரிந்துகொண்டார். 

இது குறித்து உடனடியாக தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் பஸ் நிலையப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்துக்கிடமான நபரை பிடித்து விசாரித்தனர். 
விசாரணையில் அவர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த தங்கவேல் (57) என்பதும், சுந்தரராஜனிடம் பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தங்கவேலை போலீசார் கைது செய்து பணத்தை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி