திருப்பூர் தெற்கு தொகுதி எம். எல். ஏ. அலுவலக கட்டிடம் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள ராகவேந்திரா கோவில் பகுதியில் புதிதாக கட்டப்படுகிறது. இதற்காக ரூ. 1 கோடியே 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய எம். எல். ஏ. அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை தொடங்கி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு எம். எல். ஏ. அறை, காத்திருப்போர் அறை, இ-சேவை மையம், கழிப்பிடம், சுற்றுச்சுவர் மற்றும் ஆழ்குழாய் கிணறு ஆகியவை அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை தெற்கு தொகுதி க. செல்வராஜ் எம். எல். ஏ. நேற்று ஆய்வு செய்தார்.
கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தி. மு. க. தெற்கு மாநகர செயலாளர் டி. கே. டி. மு. நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.