திருப்பூர் காலேஜ் ரோடு துவாரகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (45). பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளை ரயில் நிலையத்தின் முன்பு நிறுத்திவிட்டுச் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுகுறித்து வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (20) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஜெயக்குமாரின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாரிமுத்துவை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை மீட்டனர்.