திருப்பூர்: மொபட்டை திருடிச்சென்ற மர்ம ஆசாமி

817பார்த்தது
திருப்பூர்: மொபட்டை திருடிச்சென்ற மர்ம ஆசாமி
திருப்பூர் அங்கேரிபாளையத்தில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் செல்வராஜ் (56) தனது மொபட்டை நிறுவன வளாகத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அப்போது வேலை கேட்டு வந்த 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், செல்வராஜ் உள்ளே சென்றதும் மொபட்டை திருடிச் சென்றார். இதுகுறித்து செல்வராஜ் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி