அடிப்படை வசதி வேண்டி மணு

383பார்த்தது
திருப்பூர் கொடுவாய் ஸ்ரீ சாய்ராம் நகர் மற்றும் அரசு பணியாளர் நகரில் 250க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தும் பேருந்து வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் தினமும் சுமார் 4 கி.மீ தூரம் நடந்து கொடுவாய் செல்கின்றனர். இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்புவோரும் பேருந்து வசதி இன்றி சிரமப்படுகின்றனர். அடிப்படை வசதி வேண்டி சமூக ஆர்வலர் பாலாஜி தலைமையில் பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி