திருப்பூர் எம்.எஸ். நகர் நியாய விலைக் கடையில், பெண் விற்பனையாளர் பொதுமக்களை நீண்ட நேரம் காத்திருக்க வைத்துவிட்டு கைப்பேசியில் நேரம் செலவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.