திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பாத்திர பட்டறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, செம்பு, பித்தளை பாத்திர தொழிலாளர்களுக்கு 60%, ஈயப்பூச்சு பாத்திரங்களுக்கு 70%, எவர்சில்வர் பாத்திரங்களுக்கு 50% கூலி உயர்வு வழங்க வேண்டும் என அனைத்து பாத்திர தொழிலாளர் சங்க கூட்டுக்குழு சார்பில், திருப்பூர் வட்டார முழுக்கு கூலி பாத்திர பட்டறைதாரர்கள் சங்கம் மற்றும் திருப்பூர் பாத்திர வியாபாரிகள் சங்கத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த 16-ந்தேதி மனு அளிக்கப்பட்டுள்ளது.