திருப்பூர் குமரன் சாலை, மாநகராட்சி சந்திப்பு போன்ற பரபரப்பான பகுதிகளில்
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் 'நோ சிக்னல், நோ டிராபிக்' என்ற புதிய முறை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி சந்திப்பில் இரும்பு தடுப்புகள் அமைத்து சிக்னல் இல்லாத
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அப்பகுதியில்
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.