திருப்பூர்: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை வடமாநில வாலிபர் கைது

799பார்த்தது
திருப்பூர்: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை வடமாநில வாலிபர் கைது
சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 24 வயது கேரளாவைச் சேர்ந்த இளம்பெண், நேற்று முன்தினம் சென்னை சென்ட்ரல்-மங்களூரு எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கேரளா சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பெட்டியில் பயணம் செய்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 27 வயது செர்ஜூன் கோக் என்பவர், திருப்பூர் அருகே ரயில் வந்தபோது அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். ரயில் திருப்பூர் ரயில் நிலையம் வந்ததும், அந்த இளம்பெண் இதுகுறித்து புகார் அளித்தார்.

தொடர்புடைய செய்தி