தலைமை ஆசிரியர்களுடன் அதிகாரிகள் ஆலோசனை

9பார்த்தது
தலைமை ஆசிரியர்களுடன் அதிகாரிகள் ஆலோசனை
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 26 ஆயிரத்து 461 மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர். இதற்கான ஆயத்த பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புனிதா அந்தோணியம்மாள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அதிகாரி காளிமுத்து முன்னிலை வகித்தார்.

தொடர்புடைய செய்தி