பேக்கரி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

6பார்த்தது
பேக்கரி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர் அருகே கரைப்புதூர் மற்றும் கணபதிபாளையம் ஊராட்சி பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பல்லடம் உணவு பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் குழுவினர் 52 பேக்கரி மற்றும் ஓட்டல் கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில் 8 கிலோ காலாவதியான உணவுப் பொருட்கள், 2 கிலோ செயற்கை வண்ணம் கலந்த டீ தூள், 5 கிலோ தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 6 கடைகளுக்கு ரூ. 11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தினந்தந்தி செய்தியின் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.