திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, திருப்பூர் காட்டன் மார்க்கெட் அஞ்சலகம் மற்றும் திருப்பூர் கலெக்டர் அலுவலக அஞ்சலகங்களில் செயல்படும் தபால் பொருள் பதிவு முனையங்களின் பணிநேரம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் இரவு 7.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட நேரத்தில் ஸ்பீடு போஸ்ட், பார்சல் சேவை, வணிக ஆவணங்கள், புத்தக பொருட்கள் மற்றும் பிற தபால் பொருட்களைப் பதிவு செய்யலாம்.