திருப்பூர் பெருமாள் கோவில் அருகே உள்ள மாநகராட்சி பூ மார்க்கெட்டில், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்த சில நாட்களாக பூக்கள் வரத்து அதிகரித்ததால், பொதுமக்கள் அதிக அளவில் வாங்க ஆர்வம் காட்டாததால் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) சுப முகூர்த்த நாள் என்பதால், மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.