திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: - நொய்யல் ஆற்றின் இருபுறங்களிலும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. நீதிமன்ற உத்தரவுப்படி மாசு ஏற்படுத்தும் நொய்யல் கரையோரம் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் களஆய்வு செய்து உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.