குவிந்து கிடக்கும் குப்பைகள் தொற்றுநோய் பரவும் அபாயம்

2பார்த்தது
குவிந்து கிடக்கும் குப்பைகள் தொற்றுநோய் பரவும் அபாயம்
திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சியில் குன்னாங்கல்பாளையம் பிரிவில் கடந்த 2 மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கின்றன. தொழிற்சாலை கழிவுகள் மற்றும் கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி