மாநில கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு

568பார்த்தது
மாநில கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு
திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் நேற்று நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில கூடைப்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு போட்டியில், தமிழ்நாட்டின் 8 மண்டலங்களில் இருந்து வந்த 48 மாணவர்களில் 12 பேர் தேசிய போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இந்த வீரர்கள் வருகிற ஜனவரி 2 முதல் 6 வரை ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ரகுகுமார் ஆகியோர் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.
Job Suitcase

Jobs near you