திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் மணிகண்டராஜா, 10-ம் வகுப்பு மாணவியிடம் வாட்ஸ்-அப் மூலம் ஆபாசமாக பேசியும், புகைப்படங்கள் அனுப்பியும் தொந்தரவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். 2022-ல் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில், திருப்பூர் மகளிர் நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்து, 5 பிரிவுகளில் தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் ரூ. 1. 20 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.