அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர்கள்

0பார்த்தது
திருப்பூர் மாநகர் பகுதிகளில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட அண்ணாமலை, UPSC தேர்வில் வெற்றி பெற்று கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். பின்னர், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு காவல்துறை அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார். தமிழகத்தில் பாஜகவில் இணைந்த சிறிது காலத்திலேயே அவருக்கு மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. மாநில தலைவராக அவர் சிறப்பாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த போஸ்டர்களால் அண்ணாமலை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி