திருப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வலையங்காடு, அவிநாசி ரோடு உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் என திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும்.