திருப்பூர் திருநகர் துணைமின் நிலையப் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என திருப்பூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரி நகர் உள்ளிட்ட பல பகுதிகள் இதனால் பாதிக்கப்படும்.