பாகிஸ்தான் ஆதரவு பதிவுகள்: டெல்லி போலீஸ் அதிரடி –6 பேர் கைது

967பார்த்தது
திருப்பூரில் தங்கியிருந்த 6 பேர், சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துகள் பதிவிட்டதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பல்லடம், திருமுருகன்பூண்டி, ஊத்துக்குளி பகுதிகளில் வசித்து வந்த இவர்களை இரு நாட்களாக கண்காணித்த போலீசார், திடீர் நடவடிக்கையில் கைது செய்து செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பாகிஸ்தான் தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி