நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
திருப்பூரில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நீட் தேர்வு சிதைப்பதாகக் கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் குமரன் சிலை முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.