திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுக்குட்பட்ட கீதாநகரில் கடந்த சில மாதங்களாக குடிநீர் 15 நாட்களுக்கு மேலாகவும், உப்புத் தண்ணீர் 9 நாட்களுக்கு மேலாகவும் வினியோகம் செய்யப்படாததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், நேற்று காலை 25-வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ் தலைமையில் சிறுபூலுவபட்டி பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மழை பெய்தபோதும் பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர். தகவலறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த மறியல் போராட்டத்தால், 15 வேலம்பாளையம்- சிறுபூலுவபட்டி ரிங் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.