மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

0பார்த்தது
மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
திருப்பூர் கே. பி. என். குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அமித் ஆகியோரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், தங்கள் காலனிக்கு அருகில் உள்ள மின் மயானத்திற்கு அருகிலேயே விறகு வைத்து எரிக்கும் எரியூட்டு மயானம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். இது நடைமுறைக்கு வந்தால், உடல்கள் எரிக்கப்படும்போது அதிக புகை வெளிவந்து அப்பகுதி மக்களின் உடல்நலனுக்குப் பாதிப்பு ஏற்படும் என அச்சம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அங்குள்ள திடக்கழிவு மேலாண்மை மையம், கழிவுநீர் மற்றும் மனிதக் கழிவுகளை தேக்கி வைப்பதால் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி