பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி

657பார்த்தது
பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி
திருப்பூர் பூமலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே. என். எஸ் கார்டன், கே. கே. ஜி கார்டன், என். எஸ். கே. கார்டன் மற்றும் எஸ். எஸ். எம் கார்டன் ஆகிய 4 பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதிகளில் குடிநீர் வசதி மற்றும் தெரு விளக்கு ஏற்படுத்தி தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேற்று காலை 9 மணிக்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி