திருப்பூர்-ஊத்துக்குளி ரயில் பாதையில் புதுராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில், கேட்டை திறக்கவும் மூடவும் பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் நேற்று சக்கரத்திலிருந்து கழன்று விழுந்தன. இதனால் ரயில்வே கேட்டை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. குறைந்த உயர வாகனங்கள் செல்ல வசதி செய்யப்பட்டிருந்த இந்த ரயில்வே கேட்டில், தொடர்ச்சியாக ரயில்கள் செல்வதால் அடிக்கடி திறக்கப்பட்டு மூடப்படுகிறது. இதைத் தவிர்க்க அருகிலேயே சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.