பராமரிப்பு பணிக்காக ரெயில்வே கேட் மூடல்

0பார்த்தது
பராமரிப்பு பணிக்காக ரெயில்வே கேட் மூடல்
திருப்பூர்-ஊத்துக்குளி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய கருங்கல் ஜல்லிகள் அகற்றப்பட்டு புதிய ஜல்லிகள் கொட்டப்படுகின்றன. தண்டவாளத்தை பலப்படுத்தும் பணியும் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள 2-வது ரயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி