தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று கருப்பு பட்டை அணிந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு வட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் விமல்ராஜ், லீலாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது போன்ற போராட்டங்கள் மாவட்டத்தின் பிற தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற உள்ளன.