திருப்பூரில் நடராஜா தியேட்டர் ரோடு, ஆலங்காடு பகுதியில் சுமார் 500 குடும்பங்களுக்கு வாரம் ஒருமுறை வழங்கப்படும் குடிநீரில் கடந்த 2 மாதங்களாக கழிவுநீர் கலந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சமீபத்தில் வந்த குடிநீரிலும் கழிவுநீர் கலந்திருந்ததால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.