காதர்பேட்டை திருப்பூரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். மேலும் துணிக்கடைகள் மற்றும் பல்வேறு கடைகள் அதிக அளவில் உள்ளதால் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். பார்க் ரோட்டிலிருந்து காதர்பேட்டை செல்லும் சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் வாகனங்கள் தவழ்ந்து செல்கிறது. இதில் சாலையின் ஓரத்தில் செல்லும் கழிவுநீர் கால்வாயில் கட்டிட கழிவுகள் விழுந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கால்வாய் கழிவுநீர் சாலையில் சென்று பள்ளத்தில் தேங்குகிறது. வாகனங்கள் வரும்போது அதனை கடக்கும் பொதுமக்கள் மீது கழிவுநீர் பட்டு நோய் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் வாகனங்கள் மெதுவாக செல்லும்போது தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர்கால்வாயை தூர்வாரி சாலையில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.