மாவட்ட நிர்வாகி கைதுக்கு எஸ். டி. பி. ஐ. கட்சி கண்டனம்

343பார்த்தது
மாவட்ட நிர்வாகி கைதுக்கு எஸ். டி. பி. ஐ. கட்சி கண்டனம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜாபர் சாதிக்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளதை அக்கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் ஒரு நிகழ்வை தற்போது கையில் எடுத்து, எந்தவித தொடர்பும் இல்லாத ஜாபர் சாதிக்கை கைது செய்தது போலீசாரின் ஒருதலைபட்சமான நடவடிக்கை என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் மதம், இனம் கடந்து அனைத்து தரப்பினரிடமும் அன்பாகப் பழகி வருபவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.