எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தெற்கு தொகுதி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், இளைஞர்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்க அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள், ஜமாஅத், பள்ளிவாசல் நிர்வாகங்கள், சமூக சேவை அமைப்புகள், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து தெற்கு தொகுதியில் கமிட்டி அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கண்டிப்பது, திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு பெரியகடை வீதியில் தார்ச்சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதை கண்டித்து போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.