திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காங்கேயம் சாலையில் உள்ள தனியார் (ஜேகே கேக் ஷாப்) பேக்கரியில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் பன் வாங்கி உள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்த போது அதில் மனித பல் வைத்து தயாரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
குழந்தைகளுக்கு கொடுக்க வாங்கிய பன்னில் பல் இருந்ததால் ஆத்திரமடைந்த அவர் நேரடியாக பன் தயாரிக்கும் இடத்திற்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.