திருப்பூர்: மாணவன் மர்ம மரணம்: ஆசிரியர்கள் மீது பெற்றோர் சந்தேகம்

1336பார்த்தது
கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் தீபக், உணவு இடைவேளைக்குப் பிறகு வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தான். மூக்கில் நுரை தள்ளிய நிலையில் விழுந்த மாணவனை ஆசிரியர்கள் தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்தான். மாணவனின் பெற்றோர், ஆசிரியர்கள் அடித்ததால்தான் மகன் உயிரிழந்ததாக சந்தேகம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி