நாற்றம் எடுக்கும் காய்கறி கழிவுகள்

461பார்த்தது
நாற்றம் எடுக்கும் காய்கறி கழிவுகள்
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே உள்ள தெற்கு உழவர்சந்தையில், விற்பனையாகாமல் மீதமாகும் காய்கறிகள் அழுகிப்போகும் நிலையில், அவற்றை மூட்டைகளாக கட்டி உழவர்சந்தையின் முன்பு கொட்டி வைத்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக இந்த கழிவுகள் அகற்றப்படாததால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர்சந்தைக்கு வரும் பொதுமக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி